காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில்  5 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதிகபட்சமாக சின்னக்கல்லார் -10, அவலாஞ்சி -9, வால்பாறை -7, சோலையாறு, பந்தலூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரம், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பல காற்று வீச வாய்ப்பிருப்பதால் வங்கக்கடல், இலட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: