நம்பிக்கையுள்ளோர் கோயிலுக்கு வரும்போது அவர்களின் மதத்தை உறுதிசெய்வது பிரச்சனைக்கு வழிவகுக்கும்: ஐகோர்ட் கிளை

திருவட்டார்: நம்பிக்கையுள்ளோர் கோயிலுக்கு வரும்போது அவர்களின் மதத்தை உறுதிசெய்வது பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்றும் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என அறநிலையத்துறை விதி ஏதுமில்லை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் ஏராளமான இந்துக்கள் வழிபடுகின்றனர் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. வழிபாடு செய்வதை குறுகிய பார்வையில் அணுகாமல் பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குமரி திருவட்டார் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: