இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்; அடுத்த இலக்கு தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி.! அமித்ஷா பேச்சு

ஐதராபாத்: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என அமித்ஷா பேசியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும். அந்த வகையில், தென்னிந்தியாதான் பாஜகவின் அடுத்தக்கட்ட இலக்கு. குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சிக்கு ஆட்சி அமைக்கும் எனவும் அவர் கூறினார்.

Related Stories: