அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம்!: 179 பேர் பலி; ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், மலை பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடரால் அந்த மாநிலத்தின் 23 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் பல மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: