தேனி அருகே அம்பேத்கர் சிலையை மீண்டும் திறக்கக்கோரி சாலை மறியல் முயற்சி..!!

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டுள்ள சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மீண்டும் திறக்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. கிராமச்சாவடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை சமூக விரோதிகள் சிலரால் 25 ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டு தற்போது வரை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும். நேற்று சிலர் உடைந்த அம்பேத்கர் சிலையை தன்னிசையாக சீரமைத்து வர்ணம் பூசி, இரும்பு வேலி அமைக்க முயற்சி செய்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அம்பேத்கர் சிலையை பராமரிப்பு செய்ய அனுமதி கோரியும், சிலையை மீண்டும் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கவும் வலியுறுத்தி ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்பேத்கர் சிலையை பராமரித்து மீண்டும் திறப்பது தொடர்பாக உத்தமபாளையயம் தாலுகா கோட்டாசியர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  

Related Stories: