குமரியில் ஏற்படும் கடல் சீற்றத்தால் படிப்படியாக மூழ்கி வரும் குடியிருப்புகள்: வீடுகள், சாலைகள் மூழ்கியதால் வாழ்வாதாரம் பாதிப்பு

குமரி: குமரி மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் உள்ள வீடுகள் கடல் மணலில் மூழ்கி வருவதால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் கோவளம் முதல் நீரோடு வரை மீனவ கிராம கடலோர பகுதிகளில் கடல் சீற்றமும், கடல் அரிப்பும் ஏற்படும். இதனால் ராஜக்காமங்களதுறை, அழிக்கால்வல்லவிளை உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களுக்குள், கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

ஊருக்குள் தண்ணீர் புகும்போதெல்லாம் வீடுகள் படிப்படியாக கடல் மணலில் மூழ்கி வருகின்றன. நடப்பாண்டும் அங்கு 30க்கும் மேற்பட்ட வீடுகள் மணலில் மூழ்கி வருகின்றன. அங்குள்ள சாலை முற்றிலுமாக மணலில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Related Stories: