ஆர்.கே.பேட்டை அருகே குண்டும் குழியுமான சந்திரவிலாசபுரம் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை விளக்கனாம்பூடி புதூரிலிருந்து சந்திரவிலாசபுரம்  செல்லும் ஒன்றிய தார் சாலை அமைத்து  9 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது 4 கி.மீ தூரத்திற்கு சாலையில் தார் முழுவதும் பெயர்ந்து ஜல்லி கற்களாக காட்சி அளிக்கின்றது. குண்டும் குழியுமாக மாறி போக்குவரருத்திக்கு லாக்கியற்ற சாலையாக  உள்ளது. சந்திரவிலாசபுரத்திலிருந்து  ஆர்.கே.பேட்டைக்கு சென்று வர பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  

இரவு நேரங்களில்  இருசக்கர வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்குகின்றனர். அவசர காலங்களில் பெண்கள், நோயாளிகள்  விரைவாக சென்று வர முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமாக சாலையில் சென்று வரும் இருசக்கர வாகனங்கள் பழுதடைந்து வருவதாக கிராம மக்கள்  குற்றம் சாட்டினர்.  ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று சந்திரவிலாசபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: