செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைகைக்கான விண்ணப்பங்கள் (ஆன்லைன்) //www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும், இவ்வலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு எஸ்எஸ்எல்சி படித்து  முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மற்றும் ஐடிஐ படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் பெதுப்பிரிவினருக்கு ரூ. 150. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு செய்ய இறுதி நாள் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: