மண்பாண்ட தொழிலாளி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அருகே ஆரணி நடுகுப்பத்தை சேர்ந்தவர் செல்வம் ( 68) . மண்பாண்ட தொழிலாளியான இவரும் இவரது மனைவியும் அருகில் உள்ள பெரியபாளையம் பவானியம்மன்  கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய  நேற்று முன்தினம் சென்று அங்கு இரவு தங்கி நேற்று காலை அம்மனை  தரிசனம் செய்து விட்டு நடுகுப்பத்தில் உள்ள  வீட்டிற்கு  திரும்பி

னர். வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்த செயின்,  மோதிரம்,  வளையல் என 10.5 சவரன் நகைகளையும்,  ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் தகவல் அறிந்த ஆரணி - பெரியபாளையம்  இன்ஸ்பெக்டர் தரணீஸ்வரி மற்றும் போலீசார் சம்பயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: