சொல்லிட்டாங்க...

நாட்டில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் வரை பாஜவின் சகாப்தம் தான் நிலவும். கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி தென் இந்தியாவில் இருந்து தொடங்கும்.   :- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.   :- பாமக தலைவர் அன்புமணி.

ஜெயலலிதா இருந்த பொறுப்பில் அமர அரக்கர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பணமூட்டைகளுடன் பதவியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள்.     :- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்

அதிமுகவின் நலம் விரும்பி பாஜ. ஓபிஎஸ் பாஜவில் இணைந்தால் நாங்கள் ஏன் எதிர்க்க போகிறோம்.    :- பாஜ மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்.

Related Stories: