ரேஷன் கடை பணியாளர்களுக்கு பண பரிசு

சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை:

மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோல், மாநில அளவில் சிறப்பாக செயல்படும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.6 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும்.

Related Stories: