கோயம்பேடு மார்க்கெட்டில் வாலிபரை வெட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் வாலிபரை சரமாரியாக வெட்டி பணம், செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனுஷ் (19). தனியார் கம்பெனி ஊழியர். இவர். கடந்த 29ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துவரும் நண்பரை பார்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் வழியாக நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர், தனுஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பினர்.

இதுபற்றி தனுஷ் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கோயம்பேடு பகுதியை சேர்ந்த துரைமுருகன்(22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து செல்போன், பைக், பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய கூட்டாளியை தேடி வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த அவரது கூட்டாளி சூர்யா(26) என்பவரை கைது செய்து, பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: