கவுரவ விரிவுரையாளர்கள் மாற்று பணி ஆணை ரத்து

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களின் மாற்று பணி ஆணையை ரத்து செய்து கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல்  கல்லூரிகளில் சுழற்சி -1ல் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு  2022-23ம் கல்வியாண்டிற்கு ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை ஜூன் 2022  தவிர்த்து 11 மாதங்களுக்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி  ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநரின்  செயல் முறைகளின்படி நிர்வாக காரணங்களுக்காக பணிபுரிய ஒப்பளிக்கப்பட்ட கவுரவ  விரிவுரையாளர்களின் மாற்றுப்பணி ஆணை இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: