காற்றாலைகளில் மின்உற்பத்தி 6,000 மெகாவாட்டை நெருங்குகிறது

பணகுடி: தமிழகத்தில் 11 ஆயிரத்து 800க்கும் அதிகமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அதிகளவில் காற்றாலைகள் இயங்குகின்றன. இந்த காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி திறன் இருந்தாலும் இதுவரை முழு அளவை எட்டவில்லை. இந்நிலையில் ஜூன் கடைசியில் காற்று வேகம் எடுத்தது. தற்போது காற்று தொடர்ச்சியாக அதிக வேகமாக வீசுவதால் காற்றாலை மின்உற்பத்தி படிப்படியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் அதிகபட்ச காற்றாலை மின்உற்பத்தி 5,535 மெகாவாட்டாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி 5,677 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது.

Related Stories: