பொதுப்பணி, நீர்வளத்துறையில் கண்காணிப்பாளர்கள் 25 பேருக்கு பதவி உயர்வு: முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு

சென்னை: பொதுப்பணி, நீர்வளத்துறையில் கண்காணிப்பாளர்கள் 25 பேருக்கு நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள் 25 பேருக்கு நிர்வாக அலுவலராக பதவி உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதன்படி, கண்காணிப்பாளர்கள் ரவிக்குமார், மீனாட்சி, யாசின் ஷெரீப், சீனிவாசன், ஜெயராமன், சவரிராஜ், தேன்குமரன், பழனி, உஷா, மணிமேகலை, ரவிக்குமார், மகாலட்சுமி பிரடெ்ரிக், முருகன், குமுார், ஆறுமுகம், முத்துராஜா, ஹாஜகான், தேவமுருகன், வெங்கடேஷ் சுப்பிரமணியன் முரளிதரன், சுப்பிரமணியன், செல்வம், வெங்கட்ராமன், கதிரவன் ஆகியோருக்கு நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறாதவர்கள் முதன்மை தலைமை பொறியாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். இது தொடர்பாக 2 மாதங்களுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிடப்படுகிறது.

Related Stories: