உரிமம் பெற்றவர்கள் இரண்டுக்கு மேல் துப்பாக்கி வைத்திருந்தால் நடவடிக்கை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: இரண்டுக்கு மேல் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், `ஆயுதச் சட்ட திருத்தம் (2019)ன் படி, உரிமம் பெற்ற அல்லது ஒன்றிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ரைபிள் கிளப்புகள், ரைபிள் சங்கங்களில்  உறுப்பினராக இருக்கும் உரிமம் பெற்றவர்கள் 2 துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இரண்டிற்கு மேல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் 2 துப்பாக்கிக்கு மேல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் உள்ள துப்பாக்கி சுடும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு இந்த சட்ட திருத்த விதிகளின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: