கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களை ரூ. 5 லட்சம் வரை ஏலம் விட இணை ஆணையருக்கு அதிகாரம்

சென்னை: கோயில் கட்டிடங்கள், நிலங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை ஏலம் விட இணை ஆணையருக்கு அதிகாரம் வழங்கி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை இணை ஆணையர்களுக்கு பகிர்ந்து வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்து சமய அறநிலையத்தின் பிரிவு 116ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் குத்தகைக்கு விடுதல், விதிகளின்படி குத்தகைக்கு விடப்பட்டன. இனங்களை அங்கீகரிப்பது குறித்து இணை ஆணையர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படுகிறது.

* ரூ.5 லட்சம் வரை வருடாந்திர குத்தகை மற்றும் உரிம தொகை  அல்லது வாடகை தொகை வரப்பெறும் ஏலங்களை  அங்கீகரிக்கலாம்.

* ஆணையரால் விதி 13ன் படி ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டி ஏலங்கள் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும்.

* இந்த உத்தரவு சட்ட விதிகளின்படி ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஆணையர் நேரடியாக உத்தரவு பிறப்பிப்பதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

* இணை ஆணையர்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவு சட்டப்பிரிவு 21ன் கீழ் ஆணையரின் சீராய்வுக்கு உட்பட்டதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: