தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் தாம்பரம் யார்ட்டில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக வரும் ஜூலை 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் தினமும் 4 மணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள. அதாவது, இரவு 10:25, 11:25, 11:45 நேரங்களில் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் வண்டி எண் 40144, 40148, 40150 வரும் ஜூலை 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதே போல் மறு மார்க்கத்தில் இரவு 11:20, 11:40, 11:59 ஆகிய நேரங்களில் செல்லும் மின்சார ரயில்கள் 40145, 40147, 40149 வரும் ஜூலை 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: