குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் வரும் 13ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது

சென்னை: குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் வருகிற 13ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிக வரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி நடத்தியது.

இத்தேர்வை 1.31 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இதில் 3,104 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து கடந்த 29ம் தேதி மெயின் தேர்வுக்கான ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதரார்கள் ெபற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பதவிகளுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் ேநர்முக தேர்வுக்கு 137 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் வருகிற 13ம் தொடங்குகிறது. தொடர்ந்து 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த நேர்காணல் நடைபெறுகிறது.

Related Stories: