காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். இதில் சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் காலரா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: