தொண்டியில் ரோட்டில் ஓடுது தண்ணீர் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தொண்டி: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் செல்லும் குழாய் உடைந்துள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் பாவோடி மைதானம் அருகில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

இதனால் தினமும் காலை தண்ணீர் வரும் நேரத்தில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. ஏற்கனவே தொண்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நேரத்தில் இப்படி தண்ணீர் வெளியேறி மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என மக்கள் புலம்புகின்றனர். எனவே, உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொண்டி நவ்வர் கூறியது, ‘‘பல நாள்களாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால் இதை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பொதுமக்களின் நலன் கருதி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு அலிகானிடம் கேட்டபோது, ‘‘நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட நிர்வாக சிக்கலால் சரி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது சரி செய்ய உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.’’ என்றார்.

Related Stories: