ஆர்.எஸ் மங்கலத்தில் ரூ. 35.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம்

ஆர்.எஸ் மங்கலம்:  ஆர்.எஸ் மங்கலத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் பகுதியான ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளது. இப்பகுதி முற்றிலும் வானம் பார்த்த பூமி பகுதியாகும். ஆகையால் வேறு எந்த தொழிற்சாலைகள் இல்லாததால் மாற்று வேலைவாய்ப்பை தேடும் பொதுமக்கள் இங்கு விவசாயத்திற்கு அடுத்து  கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ் மங்கலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றிற்கு மருந்துவம் பார்ப்பதற்காக ஒரு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை மிகவும் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 35. 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால், பழைய கட்டிடத்தில் மருத்துவம் பார்த்து கஷ்டபட்டு வந்தனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என  தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

அதன் எதிரொலியாக புதிய கட்டிடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையேற்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ் கனி எம்பி, பானை எம்எல்ஏ கருமாணிக்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, முன்னாள் சேர்மன் ஆனந்த் மற்றும் கால்நடை துறை இனை இயக்குநர் (பொ) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் சிவக்குமார் (பரமக்குடி) மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் ராஜா, மனிஷா, கனி அமுதன், மற்றும் கால்நடை துறையினர் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கள் கலந்து கொண்டனர்.

Related Stories: