ஆயிரம் விளக்கு பகுதியில் தீ விபத்தில் இருவர் பலி

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து நேரிட்டுள்ளது. எனினும் நள்ளிரவு நேரம் என்பதால், தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு அதிகாலை நேரத்தில்தான் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து நேரிட்ட பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில் சிக்கியிருந்த இருவரை தீக் காயங்களுடன் அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் அதிக தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: