நியூசி. அணியின் ஸ்பின்னர் சான்ட்னருக்கு கொரோனா

வெலிங்டன்:நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிச்சேல் சான்ட்னருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு சென்று அங்கு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 அணிக்கு கேப்டனாக அந்த அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அயர்லாந்து தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் ஜூர்கென்சன் கூறுகையில், ``சான்ட்னர் தற்போது நலமுடன் இருக்கிறார். அயர்லாந்து தொடருக்கு அவர் அணியில் இணைவது என்பது தற்போது உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது. அவர் முழுவதுமாக குணமடைந்த பிறகு அணியில் இணைவார்’’ என்றார்.

Related Stories: