முகப்பேரில் அதிகாலை விபத்து; நின்றிருந்த லாரி மீது மோதிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது: டிரைவர் காயம்; டிராபிக் ஜாம்

அண்ணாநகர்: முகப்பேரில் இன்று அதிகாலை நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இதன்காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை காட்டுப்பள்ளியில் இருந்து ராட்சத இரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்னை அருகே ஊரப்பாக்கத்துக்கு லாரி சென்றது. இந்த லாரி இன்று அதிகாலை 3 மணி அளவில், முகப்பேர் பைபாஸ் ரோடு பகுதியில் வந்தபோதுகட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுக்கொண்டிருந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது. இதில், அந்த லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் சந்தானம் (35) படுகாயம் அடைந்தார். லாரியில் இருந்து இரும்பு சாலையில் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதன்காரணமாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தவித்தனர்.

Related Stories: