பீரில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

ஈரோடு: பீரில் விஷம் கலந்து குடித்து ஈரோடு லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சத்தி ரோட்டில் தனியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் நேற்று முன்தினம் காலை ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த சண்முகம் (52) என்பவர், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் வந்து அறை எடுத்து தங்கினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த லாட்ஜ் நிர்வாகத்தினர் அறை கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படாததால் அறையின் ஜன்னலின் வழியே பார்த்தனர்.

அப்போது கட்டிலில் நிர்வாண நிலையில் சண்முகம் அழைத்து வந்த பெண்ணும், கட்டிலுக்கு கீழே அரை நிர்வாண நிலையில் சண்முகமும் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு இறந்து கிடந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த சண்முகம் ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர் என்பதும், அவருடன் வந்த பெண் ஈரோடு மாநகராட்சி 2ம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றும் நாராயணவலசு பகுதியை சேர்ந்த காந்திமதி (40) என்பதும் தெரியவந்தது. காந்திமதி, சண்முகத்தின் மனைவி தமிழரசியின் தங்கையாவார். சண்முகத்திற்கு தமிழரசி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். காந்திமதிக்கு சரவணன் என்ற கணவரும், 2 மகள், ஒரு மகனும் உள்ளனர்.

சண்முகத்திற்கும், காந்திமதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விரக்தியடைந்த கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு அவர்கள் பீரில் விஷம் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கிய கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: