வைர விழா காணும் தேமானூர், புனித தோமையார் ஆலயம்

குலசேகரம்: வைர விழா காணும் தேமானூர் புனித தோமையார் ஆலய  வரலாறு குறித்து இந்த வாரம் பார்ப்போம். பேராயர் மார் ஜேம்ஸ் அனுமதிப் பெற்று மலங்கரை சபையில் பணிச்  செய்ய 1934ம் ஆண்டு அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில்  வருகை தந்தார். அப்போது பேராயர் மார் இவானியோஸ் கனவை நனவாக்க  ஜோசப் குழிஞ்ஞாலில் மார்த்தாண்டத்தில்  வாடகை வீட்டில் தங்கி  அங்கே ஓர் ஆலயமும்  நிறுவினார். அங்கிருந்து இறைப்பணி செய்து  குமரியில்  பல ஆலயங்களை உருவாக்கினார். அதில் ஒன்று தேமானூர்  புனித தோமையார் ஆலயம்.

இப்பகுதியை மையமாகக்கொண்டு 1957ம் ஆண்டு மே  திங்கள் 5ம் நாள்  சின்னு நாடார்  வீட்டில்  இத்திருச்சபை தொடங்கப்பட்டது.  ஜோசப் குழிஞ்ஞாலில்  மற்றும் அருட்சகோதரிகளின் கூட்டு விசுவாச பரப்பின்படி முதன்முதலில் 05-05-1957 அன்று ஏராளமான இறைவிசுவாசிகளுக்கு  திருமுழுக்கு வழங்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி.ஜோசப் குழிஞ்ஞாலில், உபதேசியார்  குழந்தைசாமி,  சகோதரி அந்தோணியம்மா ஆகியோரின் முயற்சியாலும்,பேராயர்  மார் இவானியோஸ் நல்லுள்ளத்தாலும் 1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள்  21ம் நாள்  புனித தோமையார் தேவாலயம்  கட்டிமுடித்து அர்ச்சிக்கப்பட்டது.  

பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் தேவாலயத்தை அர்ச்சித்தார். வழிபாட்டு ெஜபங்களும், மரையுரைகளும் தாய்ெமாழியான தமிழில் வழங்க ஆவன செய்யப்பட்டன.இப்பத்தாண்டு காலத்தில் 625 நபர்கள் திருமுழுக்கு பெற்று  திருச்சபையின் அங்கத்தினராக மாறினர். 1977-1986 கால கட்டத்தில்  பயணம் புரியும் மக்களுக்கு இறைப்பிரசன்னத்தை உணரச் செய்யும் விதத்தில் மாதா குருசடி  கட்டப்பட்டது. பங்குத்தந்தை தங்கிப் பணிபுரிய  வீடு ஒன்று வாங்கப்பட்டது.தொடர்ந்து தொடக்கநிலைப்  பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.

இதற்காக குறுகிய காலத்தில் கட்டிடமும்  ஓர்  அரசு ஆசிரிய பணியிடமும் ஏற்பாடு செய்யப்பட்டது. வலியவிளை என்ற பங்கின் ஒரு  பகுதியில்  ஏழைப் பெண்களின் நலனுக்காக கைத்தறி நெசவாலை ஒன்று  ஆரம்பிக்கப்பட்டது . பங்கின் வெள்ளிவிழா இக்கால கட்டத்தில் வெகு  விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 2006ம் ஆண்டு கிறிஸ்து  பிறப்பு ஜூபிலி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயம் விரிவாக்கம்  செய்யப்பட்டு  பலிபீடம் மாற்றியமைக்கப்பட்டது.  கல்விக்கூடமும் புதுப்பிக்கப்பட்டு  தொடக்க நிலையிலிருந்து  நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

05-05-2005ல் குருசடி கட்டப்பட்டு  ஆயர் யூஹானோன் மார்  கிறிஸோஸ்டோமால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத்தில் பங்கு பேரவை  ஆரம்பத்தில் இருந்து அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொன்விழா நினைவு அலங்கார வளைவு உருவாக்க  முயற்சி எடுத்தபோது, ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. பங்கின் ஆன்மீக வளர்ச்சியின் உச்சத்தை எட்ட அருட்தந்தை பிலிப் தயானந்தால் 1993ம் மே 2ம் நாள் பகிர்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டது. 1984 -ம் வருடம் டிசம்பர் 2ம் நாள் புனித வின்சென்ட் - தே - பவுல் கிளைசபை முதன்முதலில்  தொடங்கப்பட்டது.

1987 -ம் ஆண்டு ஜனவரி மாதம் இவ்வியக்கம் அயல்நாட்டு  இயக்கங்களோடு இணைக்கப்பட்டது . அயல்நாடுகளிலிருந்து உதவிகள் பெற்றுக்கொண்ட ஏராளம் மக்கள் பயன் அடைந்தனர் . முதல்முறையாக 1993 -ம் ஆண்டு உதவி கிடைத்தது அதைக் கொண்டு பலவிதமான  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆடு வளர்த்தல்  திட்டம், கடன் கொடுத்தல் ஐந்து குடும்பங்களை தத்தெடுத்தும் அவர்களுக்கு உதவிவருகிறார்கள்.

 புனித தோமையார் திருநாளான ஜுலை 3 ம் தேதியை   முன்னிட்டு புனித தோமையார் ஆலய திருவிழா ஜுலை மாதம் முதல் வாரம்   கொண்டாடப்படுகிறது. தற்போது புனித தோமையார்  ஆலயத்தில்   250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Related Stories: