காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு: தமிழிசை சவுந்தராஜன்

காரைக்கால்: காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது என்று  ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். காலரா பாதிப்பை உடனே கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். காலரா பாதிக்கப்பட்டவருக்கு சிறப்பு வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று  ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

Related Stories: