காட்டேரி அணையில் முதன்முறையாக பொக்லைன் இயந்திரம் மூலம் தாமரை செடி, கழிவுகள் அகற்றம்

குன்னூர்: குன்னூர் அருகே காட்டேரி அணையில் பொக்லைன் இயந்திரத்தை மூலம் தாமரை செடி, கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அணை உள்ளது. இந்த அணையை அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காட்டேரி அணையில் இருந்து தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

வெடி மருந்து தொழிற்சாலை அணையை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் அங்கு ராணுவத்தை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது காட்டேரி அணை முழுவதும் தாமரை செடிகள் நிரம்பி காணப்படுகிறது. அணையை பாதுகாக்கும் நோக்கில் அணையை தூர்வார முடிவு செய்தனர்.

அதன்படி ராட்சத மிதக்கும் பெட்டிகள் கொண்டு அதன் மீது பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி அணையில் இருந்து தாமரை செடிகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: