×

சற்றே குறைந்த வைரஸ் பாதிப்பு; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா.! 31 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,103 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,092 ஆக  பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,568-லிருந்து 1,11,711 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,199 பேர் ஆக உள்ளது. அதைப்போல கடந்த ஒரே நாளில் 13,929 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,65,519 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,97,95,72,963 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,10,652 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : India , Somewhat less virulent; In the last 24 hours, 16,103 people have been infected with Corona in India. 31 people lost their lives
× RELATED மகளிர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்று சாதனை