அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம், சேத்துப்பட்டு ஆகிய 15 வார்டுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்தநிலையில், மேற்கண்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 400 ஆக உயர்ந்துள்ளது. 8வது மண்டலத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சுகாதார ஆய்வாளர் தலைமையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும், தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: