வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருவொற்றியூர்: பூந்தமல்லி வரதாபுரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (58). இவர், தனது பட்டதாரி மகனுக்கு அரசு வேலை தேடி வந்தார். அப்போது, திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த இவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் (56), தனக்கு அரசு துறைகளில் அதிகாரிகளை தெரியும். பணம் கொடுத்தால், உனது மகனுக்கு வேலை வாங்கி தருகிறேன், என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய துரைரஜ், ரூ.13 லட்சத்தை ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். ஆனால், 3 ஆண்டுகளாகியும் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் துரைராஜ், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு தர முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ஹரிகிருஷ்ணன் மீது திருவொற்றியூர் போலீசில் துரைராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், ஹரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: