பேன்சி ஸ்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள ரோனாக் டேவி என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்மநபர், ‘‘இந்த கடையில் இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது,’’ என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். இதனால், பயந்து போன ரோனாக் டேவி கடையை மூடிவிட்டு, உடனே எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: