தபால் ஊழியர்கள் மூலம் இருப்பிடம் சென்று 1,837 ஓய்வூதியர்களுக்கு இணையதள வாழ்நாள் சான்று பதிவு நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தபால் துறை ஊழியர்கள் மூலம் கடந்த 1ம் தேதி மட்டும் 1,837 ஓய்வூதியதாரர்களின்  இருப்பிடத்திற்கு சென்று இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து நேர்காணல் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் கடந்த 1ம் தேதி முதல் துவங்கப்பட்டது. ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று இணையதள மின்னணு வாழ்நாள் சான்று வழங்கும் சேவையை இந்திய அஞ்சல் வங்கி தபால்துறை பணியாளர்கள் மூலமாக செய்து வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி மட்டும் 14,760 ஓய்வூதியர்களுக்கு இணையதள வாழ்நாள்  சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 1837 ஓய்வூதியதாரர்களுக்கு தபால் துறை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து நேர்காணல் செய்யப்பட்டுள்ளது. இ-சேவா, பொது சேவை மையங்களிலும் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து 2022ம் ஆண்டிற்கான ஓய்வூதியதாரர்கள் ஆண்டு நேர்காணல் செய்யப்படுகிறது. இணையதள மின்னணு வாழ்நாள் பதிவு செய்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வாழ்நாள் சான்று பதிவு செய்த 3 நாட்களுக்குள் ஓய்வூதியதாரர்கள் கருவூலத்தில் அளித்துள்ள செல்போன் எண்ணிற்கு வாழ்நாள் சான்று ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: