ஆதம்பாக்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா, திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆதம்பாக்கம் கே.ஆர்.ஜே.கார்டனில் நேற்று இரவு நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் வெ.விஸ்வநாதன், அன்புசெழியன், கலைவாணி காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.

இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.செல்வம், திமுக தீர்மான குழு உறுப்பினர் வைத்திலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட பொருளாளர்கள் எஸ்.சேகர், எம்.எஸ்.கே.இப்ராகிம், ஒன்றிய நகர செயலாளர்கள் தமிழ்மணி, இதயவர்மன், வே.கருணாநிதி, டி.பாபு, நரேந்திரன், கோபால், திருநீர்மலை ஜெயக்குமார், தாம்பரம் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம், மார்த்தாண்டன், வழக்கறிஞர் எழிலரசு, மணப்பாக்கம் டி.ரவி, கவுன்சிலர்கள் சாலமோன், பூங்கொடி, துர்கா தேவி நடராஜன், தேவி ஏசுதாஸ், பாரதி வெங்கட், பிருந்தாஸ்ரீ, நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன், ஏசுதாஸ், எம்.ஜி.கருணாநிதி, கே.பி.முரளிகிருஷ்ணன், லியோ பிரபாகரன், கிறிஸ்டோபர், ஸ்ரீகாந்த், கந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: