மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு

திருவில்லிபுத்தூர்: இந்தியாவில் மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: இந்தியாவில் பொருளாதார சிக்கல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தலாக பார்க்கக் கூடாது. இடதுசாரி கொள்கைகளை அடிப்படையாக கொண்ட மதச்சார்பற்ற  கூட்டணிக்கும், மதவாத அரசியலை முன்னிறுத்தும் பாஜ தலைமையிலான கூட்டணிக்கும் இடையேயான தேர்தலாகும். நாட்டில் மதச்சண்டையை உருவாக்கி, மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிக்கிறது. நூபுர் சர்மாவின் கருத்து உலகளவில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிராக கருத்து சொல்லும், அனைவரையும் கைது செய்வது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: