சொல்லிட்டாங்க...

* அதிமுக சட்டவிதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

* 8 ஆண்டாக பிரதமராக பதவி வகிக்கும் மோடி வாங்கியுள்ள கடன் ரூ.82 லட்சம் கோடி. நாட்டின் மொத்த கடன் ரூ.155 லட்சம் கோடியானதுதான் மோடி அரசின் சாதனை. - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

* 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, மதசார்பற்ற கூட்டணி பதவியேற்க வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா

* ஜி.எஸ்.டி வரி உயர்வு தமிழக வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதால், அதை திரும்பப்பெற ஒன்றிய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: