தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி அருகே பாகிஸ்தான் பகுதியில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். நேற்று இரவு 7 மணியளவில் அவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளான். புதிய இடம் என்பதால் வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரியாமல் சிறுவன் அப்பா, அப்பா என அழுதுள்ளான். இதனை பார்த்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவனை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை முன்னிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான்.

Related Stories: