அமெரிக்காவில் கடும் குழப்பம் கருக்கலைப்புக்கு அனுமதி தந்த உயர் நீதிமன்றங்களால் பரபரப்பு: உடனடி தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

நியூயார்க்: அமெரிக்காவில் 50 ஆண்டுகால கருக்கலைப்பு சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில், டெக்சாஸ், ஒஹியோ மாகாணங்களில் கருக்கலைப்புக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்ற கிளை உடனடியாக தடை விதித்ததால் அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டு அளிக்கப்பட்ட ரோ-வேட் வழக்கின் தீர்ப்பில், பெண்களுக்கு  கருக்கலைப்பு உரிமையை அளித்தது இந்நாட்டு உச்ச நீதிமன்றம். ஆனால், இந்த உரிமையை 50 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் அதே உச்ச நீதிமன்றமே பறித்தது. இதனால், அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்புக்கு தடை விதித்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதை எதிர்த்து, அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெக்சாஸ் மற்றும் ஒஹியோ மாகாண உயர் நீதிமன்றங்கள் 6 வாரத்திற்கு உட்பட்ட கருவை கலைக்க மருத்துவமனைகளுக்கு உரிமை உண்டு என கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதனால் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் கருக்கலைப்பு செய்வதற்கான பணிகளை தொடங்கிய நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு டெக்சாஸ் மாகாண உச்ச நீதிமன்ற கிளை தடை விதித்தது. இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஒருபுறம் பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதித்து சட்டங்கள் அமல்படுத்தும் நிலையில், மறுபுறம் உயர் நீதிமன்றங்கள் இதுபோல் தீர்ப்பளிக்கின்றன. இதனால், கருக்கலைப்புக்காக அமெரிக்க பெண்கள் மாகாணம் விட்டு மாகாணம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

* குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை

அமெரிக்காவின்  அப்பாலாசியா பிராந்தியின் ஆலன் நகரில் குடும்பப் பிரச்னை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 49 வயதான லான்ஸ் ஸ்டோர்சை போலீசார் நேற்று கைது செய்ய சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில், அவரை  கைது செய்ய சென்ற 3 போலீசார் பலியாகினர். அவர்குளடன் சென்ற மோப்ப நாயும் பலியானது. இருப்பினும், ஸ்டோர்சை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: