இம்மாதம் ஐசிசி கூட்டம் ஐபிஎல் ஆட்டங்கள் அதிகரிக்குமா?

துபாய்: ஐசிசி பொதுக் குழு கூட்டம்  ஜூலை 25, 26 தேதிகளில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்கிறது. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ள நிலையில் புதிய தலைவருக்கான தேர்தலும் நடக்க உள்ளது.  ஐபிஎல் தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப ஆட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அந்த நேரங்களில் சர்வதேச ஆட்டங்கள் நடத்துவதை தவிர்க்கவும் பிசிசிஐ வலியுறுத்தும் எனத் தெரிகிறது. பெரும் வருவாய் ஈட்டும் போட்டி என்பதாலும், வீரர்களுக்கு அதிக வருமானம் தரும் போட்டி என்பதாலும் பிசிசிஐ வேண்டுகோளை ஐசிசி ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா எப்படி தனது கருத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படி ஆதரிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் நீண்ட காலமாக வலியுத்தி வரும் இந்தியா, பாகிஸ்தான்  மற்றும் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு போட்டியை நடத்துவது குறித்து ரமீஸ் மீண்டும் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

Related Stories: