வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வெட் கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதம் 5 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும், பம்ப்செட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வரி உயர்வால் தொழில் துறையும், வேளாண் துறையும் வீழ்ச்சியை சந்திக்கும். குறிப்பாக கோவையில் நடந்து வரும் கிரைண்டர்கள் உற்பத்தி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான வரி உயர்வும் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜி.எஸ்.டி வரி உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதால், அதை திரும்ப பெறும்படி ஒன்றிய அரசை தமிழக அரசும் கேட்டு கொள்ள வேண்டும்.

Related Stories: