ஈபிஎஸ் கிளம்பிய பிறகு மேடைக்கு வந்து திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் நானே என பேட்டி!!

சென்னை : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமாகா. தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக. பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் ஓபிஎஸ் இருந்டுவிட்டார். மேடையில் ஈபிஎஸ், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்ந்து மேடைக்கு வந்த திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பேசிய அவர், அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் அனைவரும் திரௌபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி,என்றார்.இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் வரிசையில் காத்திருந்து திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து பன்னீர் செல்வம் சால்வை அணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர் செல்வம், அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன்.குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவை தெரிவித்து இருக்கிறோம்.அதிமுக சார்பில் இதய பூர்வ ஆதரவை தெரிவிக்கிறேன்,என்றார்.

Related Stories: