`ஓ.பன்னீர்செல்வம் இன்றி ஓர் அணுவும் அசையாது’; எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்: சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் பொதுக்குழுவில் வெடித்தது. தற்ேபாது இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இருவரின் ஆதரவாளர்களும் ஆங்காங்கே போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சேலம் ரவி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அஇஅதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இன்றி ஓர் அணுவும் அசையாது. தொண்டர்களின் சொல் கேளாமல் தன்னிச்சையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம்’ என எழுதப்பட்டுள்ளது. சேலம் ரவி என்பவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எடுத்துக்ெகாண்ட புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: