பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த மீனம்பாக்கம், அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த பவுல் (எ) பாபி (21), பல்லாவரம் கண்டோண்மென்ட், பாரத் நகரை சேர்ந்த ஜாகீருல்லா (25), சேலையூர், ரங்கநாதன் தெருவை சேர்ந்த உதயசீலன் (46) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 600 போதை மாத்திரைகள், 100க்கும் மேற்பட்ட போதை ஊசி மருந்து, சிரெஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: