வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ187 குறைப்பு

சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் நடப்பு மாதம் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ187 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ2,186, சேலத்தில் ரூ2,139 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

கடந்த. மே மாதம் மட்டும் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயையும், வர்த்தக சிலிண்டர் ரூ2 ஆயிரத்தையும் தாண்டியது. ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ134 குறைக்கப்பட்டது. நடப்பு மாதம் ஜூலை 1ம் தேதியான நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்த புதிய விலை பட்டியலில் 2வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல்,

சென்னையில் ரூ1018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ187 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு பல்வேறு நகரங்களுக்கிடையே மாறுபட்டது. நேற்று சென்னையில் வர்த்தக சிலிண்டர் ரூ2,373ல் இருந்து ரூ187 குறைத்து, ரூ2,186 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: