உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்: தமிழக காவல் துறை தகவல்

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெற்பட்டதாக தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்பாக விசாரணையின் போது, தமிழகம் முழுவதும் காவல் துறை உயர்அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில் காவலர்கள் ஆர்டர்லிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை உடனே தமிழக காவல்துறை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

 அந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு ெபற்ற அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக பணியாற்றி வரும் காவலர்கள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உயர் காவல் துறை அதிகாரிகள் வீடுகள், மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் வீடுகளில் 210 பேர் ஆர்டர்லிகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

 அதைதொடர்ந்து அனைவரையும் அந்தந்த மாவட்ட கண்காணிப்பார்கள் மற்றும் ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள் உத்தரவுப்படி உடனே காவல் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 210 பேர் திரும்ப பெற்றப்பட்டனர். அதில் 150 பேர் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. மீதமுள்ளவர்கள் காவல் துறை பணிக்கு திரும்பிவிட்டதாக தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: