ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா சட்டீஸ்கர் பயணம்

சென்னை: எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, தமிழக பயணத்தை நிறைவு செய்துவிட்டு, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

அதன் பின்பு அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு யஷ்வந்த் சின்கா சென்னையில் இருந்து தனி விமானத்தில் ராய்ப்பூர் செல்ல இருந்தார். ஆனால் நேற்று காலையிலும், எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு சிலர் ஓட்டலில் வந்து அவரை சந்தித்ததால் யஷ்வந்த் சின்கா தாமதமாக புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் சென்றார். அவரை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: