டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.11 ஆக வீழ்ச்சி

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ79.11 ஆக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், டாலர் முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த 5 நாட்களாக தொடர் சரிவை கண்டு வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ78.99 ஆக  இருந்த ரூபாய் மதிப்பு, வர்த்தக முடிவில் 5 காசுகள் குறைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ79.11 ஆக சரிந்தது. நேற்று முன்தினம், வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ79.06 ஆக இருந்தது.

Related Stories: