300 யூனிட் மின்சாரம் பஞ்சாப்பில் இலவசம்: நேற்று முதல் அமலுக்கு வந்தது

சண்டிகர்: பஞ்சாப்பில் மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சார திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பக்வந்த் மான் முதல்வரானார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி ஆட்சி தற்போது மக்களுக்கு மாதம்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது.  பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றால்  ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்  மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்தது.

அதன்படி, மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இதற்கு முந்தைய அரசுகள்  தேர்தலின்போது பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால், அவற்றை நிறைவேற்றும் முன்பாகவே அவர்களின் 5 ஆண்டு ஆட்சி முடிந்து விடும்.  ஆனால், நாங்கள் கொடுத்த இலவச மின்சாரம் வாக்குறுதியையும் நிறைவேற்றி உள்ளோம்,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: