சாலை விபத்தில் பிரபல ரவுடி பலி

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு  தட்டார்மலைத்தெரு பகுதியை சேர்ந்தவர்  காஜாஷெரீப். இவரது, மகன் உசேன்பாஷா (28). இவர், வேலைக்கு செல்லாமல் வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என ஈடுபட்டு அதில், கிடைக்கும் பணத்தில் தனது கூட்டாளிகளுடன் கஞ்சா போதையில் இருந்து வந்தார்.  உசேன்பாஷா  மீது செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வருடம் மதுராந்தகம் பெட்ரோல் பங்க் காவலாளியை கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி ஒரு வருடமாக சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்துவிட்டு கடந்த 10 தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில்  வெளியில் வந்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த படாளம் பகுதியில் தனது நண்பரை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில்  செங்கல்பட்டு நோக்கி இவர் வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து. இதில், உசேனின் டு வீலர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்து மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: